
16 கடற்தொழிலாளர்களையும் 2 விசைப் படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் கடற்தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூறும் விதமாக நாளை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கடற்தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக இராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்தொழில் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக கடற்தொழிலில் நேரடியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்களும் சார்ந்த தொழிலாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்களும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்பட கூடிய இராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகம் கடற்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
நாளை சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.