
கடந்த 20.03.2022 அன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ் வருகையின் போது அதனை எதிர்த்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாய்மார்கள் படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் நாளை (26.03. 2022) காலை 10.00 மணி அளவில் நல்லூர் சட்டநாதன் தெருவில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த கலந்துரையாடலிற்க்கு சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் இவ்விடயம் தொடர்பான நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது