யாழ்.புத்துார் – நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் அத்துமீறி அகழ்வு பணிகளில் ஈடுபட்டதால் நேற்று அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வ நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கு
தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி நிலாவரை வளாகத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் கட்டுமானங்களில் ஈடுபட எத்தணிப்பதாக முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து தவிசாளர் சபையை இடைநடுவில் நிறுத்திவிட்டு சபை உறுப்பினர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலர் அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் அங்கு நின்றுள்ளனர்.
சபையினர் வருவதை கண்ட இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து சபையினர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் என்ன செய்கிறீர்கள் என வினாவினர்.
எனினும் அகழ்வில் ஈடுபட்டவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை. பொலிஸாரும் அங்குவந்தபோது தவிசாளர் நடந்தவற்றை பொலிஸாரிடம் முறையிட்டனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்தேசிய முன்னணியின் முக்கியஸ்த்தர் க.சுகாஸ் ஆகியோரும் அங்கு சென்று முரண்பட்ட நிலையில் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.