
வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் இன்னமும் மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றனர். அத்துடன் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவும் மக்களின் காணிகளை அபகரிக்கின்றன. என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டது. இராணுவத்தினரால் காணி சுவீகரிக்கப்படுகின்றது. என்று தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தொிவித்திருந்தபோது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராணுவத்தினருக்கு காணிகளை சுவீகரிக்கவேண்டாம் என பணித்துள்ளோமே? என கூறினர்.
இல்லை இராணுவத்தினருக்கு காணிகள் சுவிகரிக்கப்படுகின்றது. என கூறியபோது ஆச்சரியத்துடன் செவிமடுத்தார் ஜனாதிபதி, இதன்போது குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எப்போது நடைபெற்றது என கேட்டுள்ளார். இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் மாதகலில், வடமராட்சி கிழக்கில் நடைபெற்றது என கூறியிருக்கின்றனர்.
காணி சுவீகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் தாங்கள் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தொிவித்தனர். அவற்றை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை ஜனாதிபதி, பிரதமர் ஏற்றுக்கொண்டனர்.