வடகிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா – எம்.ஏ.சுமந்திரன் இடையில் பேச்சு.. |

வடகிழக்கு மாகாணங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இடையே தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பின்போது வடகிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தது. எனினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. என இராணுவம் மறுத்தது.

இந்நிலையில் இராணுவ தளபதியும் – நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிக்க படையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில்

பொதுமக்களுடைய எதிர்ப்பினால் அவை தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை இராணுவ தளபதிக்கு சுமந்திரன் நினைவூட்டியுள்ளார். இந்நிலையில் அபகரிக்கப்பட்ட மற்றும் அபகரிக்க முயற்சிக்கப்படும் இடங்கள், நிலங்கள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு இராணுவ தளபதி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன் யாழ்.மாவட்டம் தொடர்பான தகவல்கள் முழுமையாக உள்ளதெனவும், மற்றய மாவட்டங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வழங்குவதாக கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews