
ஜேர்மனியில் வசிக்கும்
கருணாகரன் விதுஷனின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை முதலுதவி சஙக தேசிய கண்காணிப்பாளருமான வை.ஜெகதாசினால் கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க உப செயலாளர்,பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்