அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம் என அரசியல் ஆய்வாளரும்.   சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சட்டதடதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர்  நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் முகை்கியஸ்தர் மருத்துவர் க.பவணந்தி  அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது

 

கடந்த 25 ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையே
பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அரசாங்கம் அரசியல் ரீதியாகவும்,
பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாகவே
பேச்சவார்த்தைக்கு வந்தது. எனவே பேச்சுவார்த்தையைக் கவனமாக கையாளுமாறு
கேட்டிருந்தோம். தேசமாக அணுகுதல், சொந்த நிகழ்ச்சி நிரலின்படி
செயற்படுதல், அரசின் மனவிருப்பை உத்தரவாதப்படுத்துதல், மூன்றாம் தரப்பின்
மத்தியஸ்தத்தை பெற்றுக்கொள்ளுதல் என்பன அணுகுமுறையில் இருக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தியிருந்தோம். தமிழ்த் தரப்பின் செயற்பாடுகள் அரசைப்
பாதுகாப்பதாக இருக்கக் கூடாது எனவும் கூறியிருந்தோம்.
இந்த அணுகுமுறைகள் எதுவும் பேச்சுவார்த்தைச் செயற்பாட்டில்
பின்பற்றப்படவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் முறையான
கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ
விடுதலை இயக்கம் பேச்சவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. துறைசார் நிபுணர்களின்
கருத்துக்கள், மக்கள் அமைப்பின் கருத்துக்கள் எவையும் பெறப்படவில்லை. முதலாம்
நாள் பேச்சுவார்த்தையை நிகழ்ச்சிநிரலை தயாரிப்பதற்கும் நல்லெண்ணத்திற்கான
மன விருப்பத்தின் உத்தரவாதத்தை பெறுவதற்கும் பயன்படுத்தும்படியும்
கூறியிருந்தோம். அவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
சம்பந்தன் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி
கேட்டிருக்கின்றார். தற்போது யாப்பில் உள்ள 13 வது திருத்தத்தை
நடைமுறைப்படுத்துவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு
முதல்  நாள் ஜனாதிபதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு
கொண்டபோது கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை பற்றியும் கூறியிருதார்.
அதற்கு ரணில் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பு முயற்சி
இடம்பெற்றபோது ஏழு மாகாணங்ளின் முதலமைச்சர்கள் ஆளுனர்களின் அதிகாரங்களை
நீக்கி மாகாண சபையிடம் அவற்றை வழங்குங்கள் எனக் கேட்டிருந்தனர். எனவே
ஆளுநரின் அதிகாரத்தை நீக்கி மகாணசபையை பலப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு ரணில்
விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார்,

இந்தத் தகவலை அவர் உடனடியாக சுமந்திரனுக்கும் தெரியப்படுத்தி ஆளுநரின் அதிகாரத்தை நீக்கி மாகாண சபையை பலப்படுத்துவது பற்றி பேசுங்கள் எனவும் கூறியிருந்தார். ஆனால் இந்த விடயம் பற்றி சம்பந்தன் வாயே திறக்கவில்லை.
ஆளுநரின் அதிகாரத்தை நீக்கினாலும் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு
உதவப்போவதில்லை. சட்டவாக்க அதிகாரம வடக்கு கிழக்க இணைப்பு, ஒருங்கிணைந்த
பட்டியலை நீக்குதல் போன்ற பிரச்சினைகளும் அங்கு உள்ளன. இவற்றை
மேற்கொள்ளாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் எந்தப்பயனும்
கிடைக்காது. 13வது திருத்தம் பற்றி தமிழத் தரப்பு பேசும்போது அதனையே
அரசியல் தீர்வாக தமிழ் மக்களது தலையில் கட்டிவிடும் அபாயமும் உண்டு.
அமெரிக்க- இந்திய – மேற்குலகின் நிகழ்ச்சி நிரலும் இதுதான். 13வது திருத்தம்
யாப்பில் உள்ளது. எனவே நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கு 13வது திருத்தத்தை
திருத்தங்களுடன் அமூல்படுத்துங்கள் எனக் கேட்பதே பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ் மக்கள் சந்திக்கின்ற அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல்
ஆக்கப்பட்டோர் பிரச்சினை,  காணிப்பறிப்பு பிரச்சினை பற்றியும் உத்தரவாதம்
வழங்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் கூறுகின்றார். அரசியல் கைதிகள்
பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு எந்தக் காரணமும் தேவையற்றது. அரசியல்
தீர்மானம் ஒன்றின் மூலம் உடனடியாக அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை
செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பினர் அழுத்தமாக
முன்வைத்திருக்க வேண்டும். போர் முடிந்தவுடன் நல்லிணக்கத்திற்கு செல்வதற்கு முதல்
ஆற்றுகின்ற பணி அரசியல் கைதிகளை விடுவிப்பதுதான். ஆனால் 10
வருடங்களாகியும் இந்தச் செயற்பாடு இடம்பெறவில்லை. மரணதண்டனைக் கைதியான துமிந்த
சில்வாவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு இது பெரிய காரியமல்ல. மன விருப்பத்ததான்
இங்கு முக்கியமானது. துமிந்த சல்வா தொடர்பான மன விருப்பு தமிழ் மக்கள்
தொடர்பாக வரவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் தெளிவான உரையாடல்
இடம்பெறவில்லை. மேலோட்டமான உரையாடலே இடம்பெற்றது. இந்த விவகாரத்தில்
சர்வதேச சமூகம் சிபார்சு செய்த நிலைமாறுகால நீதி நடைமுறைப்படுத்தப்படல்
வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்க வேண்டும். இது போதுமானளவு இடம்பெறவில்லை.
இது பற்றிய விசாரணை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற
வேண்டுமே தவிர உள்ளுர் பொறிமுறையில் மட்டும் இடம் பெறக் கூடாது.
காணிப்பறிப்புத் தொடர்பாக கண்காணிப்புடன் கூடிய பொறிமுறை ஒன்று
உருவாக்கப்படல் வேண்டும். அது பற்றியும் பேசப்படவில்லை. புலம்பெயர்ந்தவர்களின் முதலீடு அரசியல் தீர்வு இல்லாமல் முன்னெடுக்க முடியாது.
எனவே காணிப்பறிப்பு அதிகாரங்களைக் கையாள்வதற்கும்,
புலம்பெயர்ந்தோர் முதலீட்டைக் கொண்டுவருவதற்கும் அரசியல் தீர்வு வரும்வரை
இடைக்கால நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். எனவே இடைக்கால நிர்வாகம்
ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் சக்திகளையும் அழுத்தம் கொடுக்குமாறு
வேண்டுகின்றோம். என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews