
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கும், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.


தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும். அவற்றை குறைப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பிலும். உரப்பிரச்சினை தொடர்பிலும். உரமின்மை காரணமாக கடந்த போக செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் நடராஜா சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் பெரிய பரந்தன் வட்டார அமைப்பாளர் யதீஸவரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.