
யாழ்ப்பாணத்திற்க்கு பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது.



குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.