யாழ்.கோப்பாய் ஜே – 262 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டுக்குள் இரும்பு கம்பிகள் மற்றும் வாள்களுடன் நுழைந்த வன்முறை கும்பல், 30 மற்றும் 26 வயதான இருவர் மீது தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.