லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் தனது வீட்டிலுள்ள பூச்செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடி வளர்ப்பது தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கசியவிடப்பட்டிருந்த நிலையில் மேற்படி நபருடைய வீட்டை நேற்றுமுன்தினம் முற்றுகையிட்ட பொலிஸார் நபரை கைது செய்ததுடன்,
வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளையும் மீட்டிருக்கின்றனர்.