கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மட்டுமே எரிவாயு வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு வினியோகத்தர் நிலையத்திற்கு முன்பாக நேற்றும் மக்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் 28ம் திகதி முதல் அங்கு எரிவாயு விற்பனை செய்யப்படுவதில்லை எனவும், கடைகளிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் எரிவாயு வினியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் சிரமங்களிற்குள்ளானதுடன், எரிவாயு விநியோகம் இடம்பெறாத வகையில் பிரதான வீதியை மூடியிருந்தனர்.
இந்த நிலையில் கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மட்டுமே எரிவாயு வினியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டிய மக்கள் அவ்வாறு எம்மால் கொல்வனவு செய்து பெற்றுக்கொள்ளாத நிலை காணப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் எரிவாயு வினியோகத்தர் நிலைய ஊழியர்கட்கும் வருகை தந்திருந்த மக்களிற்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றது.
தொடர்ந்து குறித்த மக்களிற்கு வர்த்தக நிலையங்களில் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு வினியோகத்தர் நிலையத்திற்கு மக்கள் வருகை தந்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டாம் எனவும், அங்கு விற்பனை இடம்பெறமாட்டாது எனவும் தெரிவிக்கும் அவர்கள் தேவையான சிலிண்டர்கள் வர்த்தக நிலையங்களிற்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்..