பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவர் சொன்ன கதையைத்தான் இன்றும் சொல்கிறார்கள், எங்களுடைய மீன்பிடி அமைச்சரும் சேர்ந்து கருத்து போது இந்திய மீனவர்கள் அவகாசம் கோரியிருக்கிறாகள், நாங்கள் கால அவகாசம் கொடுக்க எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. அவர்களது கடலில் அவர்கள் மீன் பிடிக்க நாங்கள் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அண்மையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட போது எல்லை தாண்டிய மீனவர்கள் என்ற வசனம் இந்தியா பாவிக்கின்றது. அப்படியாயின் எமது பகுதிக்கு வரும்போது எமக்கு எல்லை இல்லையா? நீங்கள் வந்தால் எல்லை இல்லை நாங்கள் வந்தால் எல்லை இருக்கிறதா? இது எல்லாம் எங்கள் வளத்தை சுரண்டுகின்ற வேலை. எல்லா நாடும் சீனா ஒருபக்கத்தால் சுரண்டியது, இந்திய மற்ற பக்கத்தால் சுரண்டுகிறது.இதனால் நாங்கள் தெருவில் கிடக்கின்ற. இலை வரும். சுரண்டிக் கொண்டு இருக்கின்ற நிலையில் ஆளுக்கு ஆள் போட்டி கூடி இந்தியாவும் சீனாவும் சண்டையில்தான் கொண்டுவந்து விடப் போகிறது என்றார்.