பருத்தித்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளனர்.
திரு தர்சன், திருமதி கவிதா சித்திராதரன்,திரு.ஜெயபாலன் ஆகிய மூன்று உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் நேற்று இணைந்துள்ளனர்.
நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு இடம் பெற்ற வேளை வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்சி ஒன்று மணல் அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அம்பன் கொட்டோடை வீதியை பயன்படுத்த மாவட்ட செயலகம் ஊடக பருத்தித்துறை பிரதேச சபையிடம் அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில் அது தொடர்பான விவாதம் இடம் பெற்ற வேளை அது விஷயமாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது +தமிழ் தேசிய மக்கள் முன்னணி) அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர்களான திரு.தர்சன், திருமதி கவிதா சித்திராதரன், திரு ஜெயபாலன் ஆகியோர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து மணல் ஏற்றுவதற்க்கு அனுமதிப்பதாக வாக்களித்துள்ளனர். இதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் திரு செபஸ்ரியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் திருமதி ரஜிதா விஜயழகன் ஆகியோர் மணல் அகழ்விற்க்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசு கட்சி உறுப்பினர்களான உப தவிசாளர் திரு.தினேஸ், தவயோகநாதன், மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் ஒருவர், சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர், பெரமுன கட்சி உறுப்பினர் திரு.பிறேமதாஸ் ஆகியோர் உட்பட பத்துப்பேர் மணல் ஏற்றுவதற்க்கு அனுமிப்பதாகவும் வாக்களித்துள்ளனர்.
குறித்த அம்பன் பகுத கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து 2015 ம் ஆண்டுவரை சுமார் ஐந்து இலட்சம் கியூப் மணலிற்க்கு மேல் ஏற்றப்பட்டு பாரிய வெள்ளக்காடாக காட்சியழிப்பதுடன் உவர் நீர் கலந்து மீன்பிடி இடமாக தற்போது மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த 2017 ம் ஆண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச, செயலகம், மாவட்ட செயலகம் என்பன சிறுவர் மருத்துவ மனை கட்டுவதற்கு என் மணல் அகழ்ந்து சென்றனர் ஆனால் அப்படி ஒரு மருத்துவ மனையே யாழ்ப்பாணத்தில் எங்கும் அமைக்கப்படவில்லை எனபதை பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுவதுன் தம்மை பிரதேச செயலகம் ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் இரண்டு தடவை வடமராட்சி கிழக்கு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அழைக்கப்படுகின்றன கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிரப்தற்க்கென உருவாக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு எனும் அமைப்பை உருவாக்கி அதற்கு எதிராக ஒருநாளேனும் குரல் கொடுக்காது அதனை பயன்படுத்தி அரசியலிற்க்கு வந்து பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ஆகியமை, வகை தொகை இன்றி மணல் அள்ளிச ்செல்லப்பட்ட வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மீண்டும் அரசு சார்பான மணல் அகழ்வாளர்களுக்காக வீதியை பயன்படுத்தி மணல் அகழ்வை மேற்கொள்ள தனது உறுப்பினர்களை மணல் அகழ்விற்க்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து வீதியை பயன்படுத்த இரட்டை வேடம் பிண்டம் என்பனவாகும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ஆகியோர் மக்களுடன் இணைந்து மணல் அகழ்விற்க்கு எதிராக போராடி வடமராட்சி கிழக்கில் இருந்து மணல் கொ்ள்ளையர்களை விரட்டியடிக்க நிலையில் அவர்களது மூன்று உறுப்பினர்கள் மணல் அகழ்விற்க்கு ஆதரவாக வாக்களித்தமை மனவருத்தளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக நாகர்கோவில் பகுதியில் மணல் கொள்ளை இடம் பெற்றவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், அப்போதைய மாகாண சபை உறுப்பினர்கள் எம் கே சிவாஜிலிங்கம், ச.சுகிர்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குறித்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியதும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுவதுடன் எல்லாவற்றிற்க்கும் அப்பால் பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பூ சஞ்சீவன் தற்துணிவின் அடிப்படையில் வீதி அனுமதி பத்திரம் வழங்காமல் மணல் கொண்டு செல்ல அனுமதியை மறுத்தயாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்