இந்தியா வழங்கும் 75 வீத நன்கொடைக்காக வடக்கின் மூன்று தீவுகள் வழங்கப்படவுள்ளன என்று கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான முன்னாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இதன்போது, மின்சக்தி திட்டத்திற்காக சீனாவுக்கு வழங்கப்படுவதாக இருந்த அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகியவை இந்தியாவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
“இந்தியா எமக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளது. 75 வீதமான நன்கொடைகளுக்காக அந்தத் தீவுகளை வழங்கவுள்ளோம். அதுமட்டுமல்ல, இந்தப் பகுதிகள் பூகோள அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால், அந்தத் தீவுகளை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் – என்றார்.