சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களாக மாறின..! சிலின்டர் வியாபாரத்தில் அரச ஊழியர்கள் மும்முரம்.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் சாதாரண மக்கள் வீதிகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிவாயு விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்களுக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களில்

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதற்கு கிராமசேவையாளர் ஊடாக பெயர் விவரங்கள் பெறப்பட்டபோதிலும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களே சிலிண்டர்களை பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்வாறான நிலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பிரதேச முகவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க எரிவாயு சிலிண்டர்களை வழங்காமல் அரச திணைக்களங்களில் வைத்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில்,

அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட யாழ்.மாவட்ட செயலர் பிரதேச முகவர்கள் ஊடாக குடும்ப விவரங்களை சமர்ப்பித்து எரிவாயு சில இடர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்திருந்தார்.

எனினும் அவரது அறிவிப்புகளை முறை அரச திணைக்களங்களில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்ற நிலையில் சாதாரண மக்கள் தமது பிரதேச முகவர்களிடம் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

ஆகவே சாதாரண மக்களின் தேவைகளையும் அறிந்து எரிவாயு விநியோகத்தை சீரான முறையில் மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews