பொலிஸாரினால் தமது கடமைகளை செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஏனைய பல்வேறு அரசாங்க நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டன அன்றாட கடமைகளை முன்னெடுக்க போதியளவு எரிபொருள் இன்றி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் தொகை தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்தல், வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணித்தல், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிதல், ஏனைய ஆவணங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் அலைபேசியின் வெளிச்சத்தில் சில பணிகளை மேற்கொண்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.