எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை மீட்கும் நம்பிக்கை இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தண்ணீர், மின்சாரம் இன்மை மற்றும் உணவு மற்றும் மருந்து இல்லாமல், இவர்கள் பெரும்பாலும் கட்டிடங்களின் அடித்தளங்களில் வசித்து வருகின்றனர்
ஏனையோர் திறந்த வெளியில் நெருப்பூட்டி தங்களுக்கு உள்ள உணவை சமைத்து வருகின்றனர்.
நகரத்தின் புகைப்படங்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் பொதுமக்கள் உயிர்வாழ்ந்துக்கொண்டிருப்பதை காட்டுகின்றன.
இதேவேளை தெற்கு மற்றும் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்
நேற்றிரவு தமது காணொளி உரையில், முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் அருகே ரஸ்யா படைகளை குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
எனவே இன்னும் கடினமாக பாதை காத்திருக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற அனுமதிக்க மனிதாபிமான தாழ்வாரம் வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என்று ரஸ்யா அறிவித்;திருந்தபோதும் பின்னர் அதனை செயற்படுத்தவில்லை.