யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்தொராயன் கிராமசேவகர் பிரிவில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி எய்திய 6 மாணவர்களும் பல்கலை கழகத்திற்க்கு தெரிவாகிய இருவரையும் மற்றும் கலைஞர்கள் இருவரும் கௌரவிப்பு நிகழ்வு இன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி மண்டபத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவபாதசுந்தரம் சிவகுமார் தலமையில் பிற்பகல் 3:00 மணியளவில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக பிரதம, கௌரவ, சிறப்பு விருந்தினர்கள், மற்றும் சாதனையாளர்கள் விதையிலிருந்து விழா மண்டபம் வரை மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பபட்டு மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.
இதில் வாழ்த்துரைகளையும், விருதுகள், பரிசில்களையும் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி செ.சிறிராமசந்திரன், மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் UNAWK அமரசிங்க, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம அலுவலர் வ,தவராசா, வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு தலைவர் இ. முரளிதரன், வடமராட்சி கிலக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு.சண்முகநாதன், வத்திராயன் கிராம அலுவலர் திருமதி ராதிகா சதீஸ் உட்பட்ட விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் சாதனையாளர்கள் பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.வாகீசன் தரணிகன் எனும் மாணவன் மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி பிரிவில் முதலிடம் பெற்றுக்கொண்டமை குறிப்பிட தக்கது.