நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4 ஆம்திகதி காலை 6 மணி வரை, பொது வீதிகள் , பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், ரயில் பாதைகள், கடற்கரை போன்றவற்றில்
எவரும் செல்வதைத் தடை செய்யும் வகையில் குறித்த விசேட வர்த்தமானி அரசால் வெளியிடப்பட்டது. மேலும், குறித்த பகுதிகளில் பயணிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது பாதுகாப்பு அமைச்சின்
எழுத்துப்பூர்வ அனுமதி கட்டாயமானது எனவும் குறித்த வர்ததமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.