
இலங்கையில் சமூக ஊடகங்களின் முடக்கம், இன்று பிற்பகல் 3.30க்கு நீக்கப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்த நிலையிலும் இதுவரை அது நீக்கப்படவில்லை.
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இன்று காலை சமூக ஊடங்களுக்கும் தடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு காரணம் தெரிவித்திருந்தது.