
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம் ஏற்பட்டது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாகபொலிசார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது.
சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரனின் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்றபோது பொலிசார் அதற்கு அனுமதிக்காததால் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ஊடக சந்திப்புக்களை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டதோடு யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாண பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றுமாறு உத்தரவிட்ட நிலையில்
இதனையடுத்து பொலிசாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அதிகளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.