ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இணைய ஊடுருவிகள் மூலம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு வழங்கிய தகவல்களில், இது செயற்கையாக (Artificial Traffic Generation) ஏற்பட்ட ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இதுவரையில் உத்தியோகபூர்வமாக இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.