ரஸ்யாவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்க உக்ரைனுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து அரசாங்கம் விரும்புகிறது, இதன் மூலம்; கடலில் இருந்து குண்டு வீச்சு நடத்தும் ரஸ்யாவின் அழுத்தத்தை குறைக்க முடியும் என்று இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
ரஸ்ய ஆக்கிரமிப்பு போருக்கு மேற்கு நாடுகளின் பதிலடியில் “கியர் மாற்றத்தின்” ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செய்தித்தாள் விபரித்துள்ளது..
தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவை நோக்கி ரஸ்ய படைகள் முன்னேறுவதைத் தடுக்க ஆயுதங்களை வழங்க விரும்புவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமைச்சர்களிடம் கூறியதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று காலை ரஸ்ய ஏவுகணை தாக்குதல்களால் ஒடேசாவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
ஏற்கனவே இங்கிலாந்து வழங்கிய விமான எதிர்ப்பு ஆயுதங்களை கொண்டு உக்ரைன், ரஸ்யாவின் வான் வழித்தாக்குதல்களுக்கு பதிலடிக்கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.