
ஊரடங்கு உத்தரவை மீறிப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர் வீசப்பட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பேராதனை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாகச் செல்ல முற்பட்ட போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.