நேற்றைய தினம் (02) மாலை 6.00மணியில் இருந்து திங்கள் காலை 6.00மணி வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இன்றைய காலையில் இருந்து சமூக வலைத்தளங்களும் மாலை வரை முடக்கப்பட்டிருந்தது.
தென் இலங்கையில் ஐனாதிபதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இன்று (03)மக்கள் அனைவரும் வீதிக்கு இரங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு குறுஞ்செய்திகள் வெளியாகிய நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு முன் ஆயத்தங்கள் மேற்கொண்டனர்.
இதனையடுத்து திடீரென நேற்றைய தினம் இலங்கை அரசு குறித்த ஊரடங்கை அமுல் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.இதில் பளையிலும் ஊரடங்கு அமுலில் இருந்த காட்சிகள்.