
வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் திறன் வகுப்பறைத்தொகுதியினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.





குறித்த திறன் வகுப்பறைகளுக்கான நிதி அனுசரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தொழிலதிபர் திருஞானசம்பந்தர் கஜலோகன் , கோகுலன் பாமினி , சச்சிதானந்தம் ராகுலன் ஆகியோர் வழங்கியிருந்தனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் கதிரைகளும் வழங்கப்பட்டன.
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் தர்மரத்தினம் கிளிநொச்சி கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் நிசாகர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் முதல்வர் பங்கயற்செல்வன் அனுசரணையாளர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.