அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு , ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
மேலும் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர நிலைமை ஏற்பட்டுள்ளமை இலங்கை மக்களுக்கேயன்றி அரசாங்கத்திற்கு அல்ல. மக்கள் எதிர்கொண்டுள்ள அவசரகால நிலைமையின் அடிப்படையிலேயே அவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாறாக அவர்கள் வீதிக்கு இறங்கியமையால் அவசரகால நிலைமை ஏற்படவில்லை என்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தனது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.