நுகேகொட-மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக கடந்த வியாழன் (31) அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்திற்கு தீ வைத்த நபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த மோதலின் போது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் பேருந்திற்கு தீ வைத்த நபரை சம்பவத்தின் போது சுற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பார்த்துள்ளனர். இந்த நபரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை,
அத்துடன் இந்த செயலை செய்யும் போது ஏன் கைது செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பிலான வழக்கு மேலதிக விசாரணைக்காக புலனாய்வு பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.