உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள புச்சா நகரத்தில் ரஸ்ய படைகளால் போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து ரஸ்யா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ரஸ்யா, உக்ரைனில் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்ததன் பின்னர், அடிக்கடி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகின்றன.
இதன்போது சபையின் நிரந்தர உறுப்பினரான ரஸ்யா, அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது.
இந்தநிலையில் கியேவுக்கு அருகில் உள்ள புச்சா நகரத்தில் இருந்து ரஸ்ய படைகள் பின்வாங்கியுள்ள நிலையில் அங்கு அவர்களால் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
பிபிசி தகவல்படி நகரின் வீதிகளில் இருந்து சுமார் 400 மனித உடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ரஸ்யாவின் மீது போர்க்குற்றத்தை மேற்கத்தைய நாடுகள் சுமத்தியுள்ளன.
இந்தநிலையில் இன்று இது தொடர்பாக வாதிடும் வகையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு ரஸ்யா கோரியுள்ளது.