ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரி வீடுகளும் முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்தும் மே முதலாம் திகதி முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு மற்றும் உரம் வழங்குமாறு வலியுறுத்தி பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.