கேகாலை நிதஹாஸ் மாவத்தையில் இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேகாலை சுதந்திர மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடிக்கொண்டிருந்த போது தனியார் விமான சேவைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கேகாலை மாநகர சபை மைதானத்தில் தரையிறங்கியுள்ளது.
கேகாலையைச் சேர்ந்த பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகொப்டரில் அப்பகுதியை விட்டு வெளியேறியதாக கேகாலை பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த உலங்குவானூர்தி புறப்பட்டு கண்டி நோக்கி பயணித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் வீடும் கேகாலை நகரசபை விளையாட்டு மைதானத்தை அண்மித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.