
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன் களுக்கு எரிபொருள் நிரப்புவதனால் நீண்ட நேரமாக வாகனங்களைத் நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த வாகனங்களின் சாதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு சற்று முன்னர் ஏற்பட்டது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் எரிபொருள் நிரப்புவதற்கு வந்தவர்களுடனும், எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகளுடன் உரையாடி உடனடியாகவே கொள்கலன்களில் டீசல் நிரப்புவதில்லை என்ற உத்தரவாதத்தை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகள் வழங்கியதை அடுத்து எரிபொருள் கொள்கனனில் நிரப்புவதை நிறுத்திய பின்னர் நிலைமை சமூகம் அடைந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை முதல் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிய கொள்கலன்களில் டீசல் நிரப்ப படுவதனால் வாகனங்களுடன் காத்திருந்த சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகிகள் உடன் முரண்பட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த பருத்தித்துரை போலீசார் இருதரப்புடனும் சமரசம் பேசி எரிபொருள் கொள்கலன்களில் நிரப்புவதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் இல்லை எனக்கூறி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் டீசல் விநியோகிப்பதை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது, அவர்கள் டீசல் வரும் என ஏதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.