நிறைவேற்று அதிகாரத்திற்கு செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பொறுப்பை நாடாளுமன்றம் ஏற்று அனைவரும் இணைந்து நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் தனது கடமையை செய்ய தவறினால், நாடாளுமன்றத்தில் இருக்கு அனைவருக்கும் எதிராகவும் மக்கள் அணித்திரள்வார்கள். ஆளும் கட்சியின் நாடாளுமன்றம் உறுப்பினர்கள் பலர் இங்கு உரையாற்றி தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசும் போது எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என்றால், எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி நடந்தால், நிலைமை மேலும் உக்கிரமடையும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.