பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இதன்போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தெரியாமல் சபை முதல்வர் அல்லது அரசாங்கத்தின் அமைப்பாளர் பதிலளிக்க முடியும்.
தற்போது வர்த்தக்கத்துறை அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி சார்பாக சில இராஜாங்க அமைச்சர்கள் சபையில் பதிலளித்தனர்.
விசேடமாக அவசரகால நிலை நாட்டில் பிரடகனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இந்த பாராளுமன்றத்துக்கு பதிலளிக்க கூடியவர் யார்?
அதேபோன்று வர்த்தகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன பணியாற்றிவந்தார். அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக இராஜாங்க அமைச்சராக லசந்த அழகியவண்ண செயற்பட்டார். அவரும் பதவி விலகியுள்ளார்.
வர்த்தகத் துறை அமைச்சரும் பதவி விலகியுள்ளார். வர்த்தக இராஜாங்க அமைச்சரும் பதவி விலகியுள்ளார். எனவே இந்த பாராளுமன்றத்தில் வர்த்தக அமைச்சு தொடர்பில் பதிலளிக்க கூடியவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
இன்று நாட்டில் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. எனவே அவை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது அதற்கு பதிலளிக்க பொறுப்புவாய்ந்தவர்கள் இல்லை என்றார் யார் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர்
பாதுகாப்பு அமைச்சர் இல்லை. பிரதி பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுகின்றாரா என்பது குறித்து எமக்கு தெரியாது.
இதன்போது ஆளுங்கட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டது. பிரதி பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ தொடர்ந்து செயற்பட்டு வருகின்றாரா என்றனர்.
இதன்போது தொடர்ந்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க,
இந்த பாராளுமன்றத்தில் பதிலளிக்கான அமைச்சுக்கள் பல காணப்படுகின்றன. இன்றைய வரைபில் வர்த்தக அமைச்சருக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு வர்த்தக அமைச்சரும் இல்லை. இராஜாங்க அமைச்சரும் இல்லை. இந்த கேள்விகளுக்கு ஆளுங்கட்சியின் அமைப்பாளர் ஏதாவது கூறுவார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர், பிரதமருக்கு சகல கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கான அதிகாரம் உள்ளது என்றார்.