
இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரச்சினை ஒன்றிலிருந்து, சுழிபுரத்தை சேர்ந்த ஒருவரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெறுவதற்கு சென்றிருந்தார்.
சுழிபரத்தை சேர்ந்த நபர் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கிவிட்டு அவர்களது ஆலோசனையின் கீழ் செயற்பட்டார்.
இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் பெற முயன்றவேளை அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.