ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலிருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் நேற்றையதினம், காணொளி மூலம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, உக்ரைனில் ரஷ்யப் படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, ரஷ்யப் படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.