ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது: அசாத் சாலி

ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு மொட்டுக்கட்சி ஆரம்பமானது. இந்த கட்சியை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்பதே தற்போதைய அரசின் அன்றைய மனநிலை.

அப்பொழுது நல்லாட்சி அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது. பொருட்களின் விலை குறைவு உட்பட மக்களிடம் பணமும் இருந்தது. காசு அச்சிடவுமில்லை.

அப்படி இருக்கும் போது மொட்டுக்கட்சியை நிலைநாட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் சேர்ந்து உடைய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச முனைந்தார்கள்.

இவர்களின் நோக்கமே முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்கள மக்களை வெறியுண்டாக்கி, சிங்கள மக்களை வாக்களிக்க செய்து மொட்டுக் கட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தினர்.

ஆனால் அரசு ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews