
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மதமிழ் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான ம.க.சிவாஜிலிங்கத்தை கடற்படை முகாமிற்க்குள் அழைத்து தாக்கும் முயற்சி ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமிற்கான 617 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை செய்து சுவிகரிப்பதற்க்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகமூடாக கடற்படை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றிருந்தன. அவ்வேளை அங்கு சென்ற காணி உரிமையாளர்கள் ,
பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற. உறுப்பினர்கள் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் காணிக்காக போராடும் மக்கள் அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டு தாம் காணியை தரமுடியாது தமது காணியை நில அளவை செய்ய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது வெளியே வருகைதந்த வட்டுவாகல் கடற்படை அதிகாரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கத்தை தமது கடற்படை முகாமுக்குள்ளே அழைத்துள்ளனர்.
இதன் போது பதிலளித்த ம.க.சிவாஜிலிங்கம், நான் என்ன மோடனா உள்ளே வருவதற்கு! எமது ஒரு இலட்சத்திற்க்கு மேற்பட்ட எமது மக்களை சுட்டுக் கொன்ற உங்களது கடற்படை முகாமிற்குள் வருவதற்கு நான் என்ன முட்டாளா என்றும் பதிலளித்தார்.
நேற்று காலை 9 மணிக்கு வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களது காணிகளை நில அளவை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு அம் மக்கள் காணிகளை வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துடன் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்தை மறித்து சுமார் மூன்று மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையிலும்
பல்வேறு வழிகளிலும் குறித்த கடற்படை முகாம் காணியை அளவீடு செய்வதறக்காக நில அளவை திணைக்கள் அதிகாரிகளையும் மூன்று காணி உரிமையாளர்களை கட்டாயப்படுத்தியும்
மாற்று பாதை ஒன்றினூடாக அழைத்து சென்ற வேளையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டுவாகல் பாலத்தை மறித்து மூன்று மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வேளையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் ( காணிக்கான) மற்றும் நில அளவை உயர் அதிகாரி ஆகியோர் தாம் குறித்த காணி உரிமையாளர்களுடன் மாவட்ட செயலகத்தில் உரையாடியே காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதுவரை போராட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதே வேளை காலை ஒன்பது மணிக்கு நில அளவை செய்வதற்கு காணி உரிமையாளர்களது சம்மதம் பெறுவதற்க்காக அமைக்கப்பட்டிருந்தும் மக்களை ஏமாற்றி காணிகள் சுவீகரிப்பதற்க்காக காலை ஏழு முப்பது மணிக்கு முன்பதாகவே நில அளவை உயர் அதிகாரியை கடற்படை முகாமிற்க்குள் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஒன்பது மணியளவில் குறித்த கடற்படை முகாமிற்க்கு முன் சென்ற காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விட்டு வெளியேறுமாறும் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் மக்களை மிரட்டி காணிகளை அளவீடு செய்வதற்கு மாவட்டத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி மூலம் சமரசம் பேசப்படுவது போன்று ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றி பின்னர் தமக்கு ஆதரவானவர்களை வைத்துக்கொண்டு காணிகளை அளந்து சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம் பெற்றது.
மாவட்டத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரி தான் மாவட்ட செயலாளர் தலமையில் சந்திப்பின் பின் முடிவு மேற்கொள்வதாகவும் தன்னை நம்புமாறும் தெரிவித்ததை அடுத்து போராட்ட காரர்கள் கலைந்து செல்ல முற்பட்ட வேலையே நில அளவை திணை்கள வாகனமும் அங்கு கடற்படைக்கு ஆதரவான வட்டுவாகலில் காணி உள்ளதாக தெரிவித்து வந்த ஒருசில சிங்களவர்களும், வற்புறுததி இரண்டு தமிழ் காணி உரிமையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதே வேளை தனக்கு 50.ஏக்கர் காணி உள்ளதாக கூறி சீன பிரஜை ஒருவரும் அங்கு வருகை தந்திருந்தார். அவரது இரண்டு புதல்வர்களும் வருகை தந்திருந்தனர். அவர்கள் இருவரும் சிங்கள மொழியே பேசுகின்ற போதும் சீனப் பிரஜை தமிழ் ஆங்கிலம் சிங்களம் மூன்று மொழியும் சரளமாக பேசக்கூடியவராக காணப்பட்டார்
பலராலும் சீன பிரஜைக்கு எப்படி காணி வட்டுவாகலில் வந்தது என்ற கேள்விக்கு சீன பிரஜை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, தான் ஒரு றக்பி விளையாட்டு வீரன்றும்
அதன் இலங்கை தலைவராக இருந்டாகவும் தெரிவித்தார்.
பிரதேச மக்கள் தெரிவிக்கும் போது வட்டுவாகலுல் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும் அவர்கள் மூலம் கிடைத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை தமது காணிகளை யார் கேட்டாலும் அதனை விற்பனை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
நேற்றைய ஆர்ப்பாட்டங்களின் போது பொலீசாருக்கும் ஆர்ப்பாட்ட காரர்களுக்குமிடையில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம் பெற்றன. ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கும் மாவட்டத்திற்கு பொறுப்பான போலீஸ் அதிகாரிக்கும் முரண்பாடு ஏற்பட்டவேளை கஜேந்திகுமார் பொன்னம்பலம் மாவட்ட போலீஸ் அதிகாரியை நீ ஒரு பொய்யன், ஏமாற்ற காரன் ஏன்று திட்டித்தீர்த்தார் அதற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி தான் பொய்யன் இல்லை தன்னை அப்படி சொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
அதே வேளை இன்றைய செய்திகளின்படி குறித்த வட்டுவாகல் கடற்படை முகாம் காணிகள் மக்கள் கலைந்து சென்றபின் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.