ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தலைமை இல்லாதது ஒரு பாரிய குறைபாடாகும் என உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“ஏப்ரல் 3 மற்றும் அதன் பின்னரான நாட்களில், எதிர்ப்பு போராட்டங்களை ஒழுக்கமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தலைமை இல்லாதை பாரிய குறைபாட்டை நாம் அவதானிக்கின்றோம்.”
எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மக்களுக்கும் பிரச்சினையாக மாறியுள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை உடனடியாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பதிவு செய்யுமாறு சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், ஏப்ரல் 2 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது அடிப்படை ஜனநாயக உரிமை என்று கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டதற்கு எதிரான போராட்டத்தை கட்டுக்கடங்காத வன்முறையான போராட்டமாக மாற்றியமைக்கு, அதற்கு முன்னின்றவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சமூக ஊடகங்கள் வழியாக எவருக்கும் தெரியாத மற்றும் சமூகத்தின் மீது பொறுப்பில்லாத ஒரு குழு அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த வன்முறைப் போராட்டத்தின் முன்முயற்சி “பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற வன்முறைகளில் ஒன்றாகும்,
இது அத்தகைய பொறுப்பற்ற மற்றும் செல்வாக்கற்ற அராஜகப் போராட்டங்களால் தவிர்க்க முடியாமல் அனுமதிக்கப்படுகிறது.” என சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரான அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
“அவை மக்களின் உடனடி வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகள் அல்ல, அவை உடனடி எரிபொருளுக்கானவை. மின்சாரத்தின் மிக அவசரத் தேவைக்கு எரிவாயு தீர்வாகாது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட “கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற கோஷம் அவற்றில் அடங்கியிருந்தது.
எனவே, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கும் பிரபலமான கோஷங்களுடன் போராட்டங்கள் இன்னும் தேவை”.
நாளாந்த இன்னல்களுக்கு மத்தியில் அன்றாட வருமானத்தை ஈட்ட முடியாமல் தவிக்கும் மக்களாக இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது அரசாங்க எதிர்ப்பு, வெறுப்பு, அரச எதிர்ப்பு உணர்வுகளை சமூகமயப்படுத்தி வருவதாக தெரிவித்த தொழிற்சங்க தலைவர், இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்காத வரையில், அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தால் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்புதான் இது என்பதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“அந்த மக்களுக்கு அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அடிப்படை உரிமை உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.” எனவே, அனைத்து ஒழுங்கற்ற குறைபாடுகள் இருந்தபோதிலும், மார்ச் 31 அன்று நடந்த போராட்டத்தை காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் பலத்தைப் பயன்படுத்தி அடக்கினர்.
பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர்களால் கண்டிக்கப்பட்டது.