இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காலை 11 30 மணியளவில் ஆரம்பித்த குறித்த போராட்டம் வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.
இதில் குறிப்பாக மோசமான நிதி நிர்வாகத்தில் மனித உயிர்களை பலி எடுக்காதே, ராஜபக்ச குடும்பத்திடமிருந்து இலங்கையை பாதுகாப்போம், மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது,
அனைத்து உயிர்களும் ஆபத்தில்,
மருந்துகள் இல்லாததால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, வைத்தியசாலையில் மருந்து இல்லை வீட்டில் உணவில்லை.
உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது.
உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்றைய தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குறித்த போராட்டத்தில் தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது