புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்பு நாளில் 119.08 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டது மத்தியவங்கி..! ஒரு நாளில் அச்சிடப்பட்ட அதிக தொகை இதுவேயாம்.. |

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம் மூலம் இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 432.76 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஜனவரி 1, 2020 அன்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 1,774.77 பில்லியன் பணத்தினை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதியிடமிருந்து பதவியை பொறுப்பேற்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews