
பருத்தித்துறை சதோசா விற்பனை நிலையத்தில் நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொழுத்தும் வெயிலிலும் வரிசையில் காத்திருக்கின்றனர்.


ஒரு நபருக்கு மூன்றுகிலே அரிசி, ஒருகிலே சீனி, ஒருகிலோ பருப்பு என்பனவே நியாய விலைக்கு விற்க்கப்படுகின்றன.
இதனை பெறுவதற்க்கே மக்கள் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர்.
கோதுமை மாவு முடிவடைந்துள்ளதானால் அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களின் பின் இன்று பொருட்கள் விநியோகிப்பது குறிப்பிட தக்கது.