










USAID நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாநகர சபை தூய்மை பணியாளர்கள் 415 பேருக்கு பாதுகாப்பு அணிகலன்கள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், USAID நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி, யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.