இன்றையதினம் யாழில் மழையுடனும் இடியுடனும் கூடிய காலநிலை நிலவியது.
அந்தவகையில் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இடி விழுந்ததால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது.
எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.