நாட்டின் கிழக்கு திசையின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக இன்றும் நாளையும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்கின்ற சந்தர்பங்களில் ஏற்படும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக ஹட்டன், கொட்டகலை, கினிகத்தேனை, பொகவந்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களிற்கு மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் என மின்சாரசபை பொறியியலாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.