நாடு முழுவதும் எதிர்வரும் 11ம், 12ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது.
இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் A முதல் L வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும்,
மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.
அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10.45 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,
மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமிழ், சிங்களப் புத்தாண்டு காலமான எதிர்வரும் 13ஆம், 14ஆம் 15 ஆம் திகதிகளில் நாட்டில் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.