யாழ்.அச்சுவேலி கலாமினி திருமண மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கைதான நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 9ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே காங்கேசந்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில்
அவை GCR புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் MOR புத்தகத்தில் குறைத்து பொலிஸார் பதிவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி வீட்டில் இருந்த அனைவரும் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் வீடு உடைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் இரண்டு சோடி தோடு மற்றும் வீட்டிலிருந்து உபகரணங்கள் என்பன திருட்டு போயிருந்தது.
மட்டக்களப்பு சென்றவர்கள் வீடு வந்து திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கலா விநோதன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அச்சுவேலி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்ததுடன் சான்று பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்