டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
சிங்கள, இந்து புத்தாண்டு இன்னும் சில தினங்களில் உதயமாகவுள்ள போதிலும், தமது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய கடன் திட்டம் மற்றும் நீண்ட கால விநியோக உடன்படிக்கையின் கீழ் 30,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை நாளை (11) பெற்றுக்கொள்ளவுள்ளது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று (09) இரவு முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.