நாணயச்சபை உறுப்பினர்களுடன் பணியாற்ற மத்திய வங்கி ஆளுநர் தயாராம்!

நாணயச்சபை உறுப்பினர்களுடன் பணியாற்ற மத்திய வங்கி ஆளுநர் தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசேகரா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தனவும் முனைவர் ராணி ஜயமகாவும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவதனாலும் இலங்கை மத்திய வங்கியின் அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமாகப் பங்களித்துள்ளமையினாலும் நாணயச் சபையில் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அவர்களது முழுமையான தொழில்சார்பண்பில் நான் முழுமையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதனால் தேசத்திற்கும், நாணயச் சபைக்கும் அதேபோன்று ஆளுநர் என்ற வகையில் எனக்கும் அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும் பெறுமதியான வழிகாட்டலையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews